ஒபாமா பயம் – மக்கள் புரட்சி ஏற்படுமா?

வரலாறு காணாத அளவில் அமெரிக்கா கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நிலையில்  பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். மக்கள் புரட்சி ஏற்பட்டுவிடுமே என்ற பயத்தில் அதிபர் ஒபாமா தமது ஆசியப் பயணத்தில் மாற்றங்களை செய்திருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய வல்லரசாக கருதப்படும் அமெரிக்கா பொருளதார மந்தம் காரணமாக கடும் நிதி நெருக்கடி சந்தித்துள்ளது. முக்கிய அரசு நிறுவனங்கள் முடப்பட்டுள்ளன. 8 லட்சம் பேர் வேலை இழந்ததாக அமெரிக்க நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா, மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, புருனே ஆகிய நாடுகளுக்கு வரும் வாரம் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது மலேசிய பயணத்தை அவர் ரத்து செய்திருக்கிறார்.  மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக்கை உடல் நலத்தை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள், ஒபாமாவின் பயண ரத்து செய்தியை வெளியிட்டுள்ளன. காரணம் ஒபாமாவின் பயண செலவே ஆண்டுக்கு பல கோடிகள் தாண்டுகிறது.

Leave a Reply