அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான அதிபர் ஒபாமா. டொனால்ட் குற்றச்சாட்டு

அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான அதிபர் ஒபாமா. டொனால்ட் குற்றச்சாட்டு

donald obamaஅமெரிக்காவின் மிக மோசமான அதிபர் என்ற அவப்பெயருடன் ஒபாமா வரும் நவம்பர் மாதம் பதவி விலகுவார் என டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி வேட்பாளர்களிடையே தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தற்போதைய அதிபர் ஒபாமா மீது மிக கடுமையான தாக்குதல்களை தொடுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு கிடைக்காது என்றும் தேர்தல்வரை நான் தாக்குப்பிடிக்க மாட்டேன் என்றும் கூறினார். ஆனால் அவரது எதிர்பார்ப்பையும் மீறி நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்.

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சிரியாவில் நடப்பதை பார்த்தால் ஒபாமா ஒரு பயங்கரமான அதிபர் என்பது புரியும் மிகப்பெரிய காரணமான ஒபாமா அமெரிக்க நாட்டின் வரலாறு கண்ட மிக மோசமான அதிபர் என்ற அவப்பெயருடன்தான் பதவி விலகுவார்’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே சமீபத்தில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனை பொய்க்காரி, பித்தலாட்ட பேர்வழி, சாத்தான் என்றெல்லாம் விமர்சித்து வரும் டொனால்ட் தற்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவையும் விட்டுவைக்காமல் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply