அணு குண்டு வீசிய ஹிரோஷிமா நகரத்திற்கு செல்லும் முதல் அமெரிக்க அதிபர்.

அணு குண்டு வீசிய ஹிரோஷிமா நகரத்திற்கு செல்லும் முதல் அமெரிக்க அதிபர்.

201512040548392330_Firing-on-aid-workers-in-the-United-States-Obama-condemned_SECVPFஇரண்டாம் உலகப்போரில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களில் முதன்முதலாக அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிரோஷிமாவில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர்களும் நாகசாகியில் 74 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதன் பின்னரே அமெரிக்காவிடம் ஜப்பான் சரணடைந்து, இரண்டாம் உலகப்போரே முடிவுக்கு வந்தது. பின்னாளில் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா ஜப்பானிடம் மன்னிப்பு கேட்டாலும், இதுவரை அணுகுண்டால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கண்டறிய அந்நாட்டின் அதிபர் யாரும் இந்த இரண்டு நகரங்களுக்கும் நேரில் சென்றது இல்லை.

இந்த நிலையில் வரும் மே 27-ம் தேதி ஜி-7 உச்சி மாநாட்டுக்காக ஜப்பான் செல்லவுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹிரோஷிமா நகரத்துக்கும் செல்லவுள்ளதாக அந்நாட்டு செய்திதொடர்பாளர் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் பதவியில் இருக்கும் ஒருவர் அணுகுண்டு வீச்சுக்கு பின்னர் அந்நகரத்துக்கு செல்வது இதுவே முதல் முறை என்பதால், அவரது இந்த சுற்றுப்பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அணு ஆயுதமற்ற உலகை உருவாக்க வேண்டும் என அழைப்பு விடுத்ததற்காக 2009ஆம் ஆண்டு ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்த நிலையில் இந்த சுற்றுப்பயணத்தின் போது அணு ஆயுதத்துக்கு எதிராக அவர் உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply