இந்திய வம்சாவளி பெண் அதிகாரிக்கு சாட் நாட்டின் அமெரிக்க தூதர் பதவி கொடுத்த ஒபாமா
இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதாபாசி என்ற பெண் அதிகாரியை சாட் நாட்டிற்கான அமெரிக்க தூதராக அமெரிக்க அதிபர் ஒபாமா நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார். எனவே அமெரிக்காவின் உயரதிகாரிகளில் இந்தியரின் எண்ணிக்கை ஒன்று மேலும் உயர்ந்துள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதாபாசி இதுவரை வகித்த பதவிகளின் விபரங்கள்:
2003 முதல் 2006 வரை – ஜெர்மனி நாட்டின் பிரங்பர்ட் நகரில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் துணை முதன்மை அதிகாரி
2006 முதல் 2009 வரை – வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள அமெரிக்க தலைமை தூதரகத்தின் துணை தலைவர்
2009 முதல் 2011 வரை – அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஆப்பிரிக்க நாடுகளுக்கான விவகாரங்கள் பிரிவின் இயக்குனர்
2011 முதல் 2014 வரை – ஏமன் அருகேயுள்ள டிஜிபோட்டி நாட்டுக்கான அமெரிக்க தலைமை தூதர்
2014 முதல் தற்போது வரை – அமெரிக்காவின் மனிதவள அமைச்சகத்தில் உயரதிகாரி