டாய்லட் ரோல் பேப்பரில் ஒபாமா படம். ரஷ்ய ஓட்டலுக்கு கண்டனம்.
ரஷ்யாவில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் டாய்லட் ரோல் பேப்பரில் ஒபாமாவின் புகைப்படம் இருந்ததால் அந்த ஓட்டலில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விஷயம் சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளியே தெரிந்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் உள்ள கரஸ்னோயார்க்ஸ் என்ற நகரத்தில் ’பிரசிடெண்ட் பேக்’ என்ற ஆடம்பர நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலின் வரவேற்பறையில் அதிபர் புதினின் சிறுவயது புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் புதினின் ஆளுயர மெழுகு சிலையும் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மெழுகு சிலையை பார்த்து ரசித்து வருகின்றனர்.
ரஷ்ய அதிபரை பல வகையிலும் பெருமைப்படுத்தும் இந்த ஓட்டல் நிர்வாகம், அமெரிக்க அதிபரை இழிவு படுத்தும் வகையில் இந்த ஓட்டலின் டாய்லெட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் படங்கள் உள்ள பேப்பர் ரோலை வைத்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரி நாடாக அமெரிக்கா இருந்தாலும் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இதை ரசிக்கவில்லை. இதுகுறித்து அவர்கள் சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி கழிவறைக்குள் நுழைந்தவுடன், கீழே தரையில் போடப்படும் ‘தரை விரிப்பு’ அமெரிக்க தேசிய கொடியில் உள்ளது. ஓட்டல் நிர்வாகிகள் இதை உடனடியாக மாற்ற வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது.