அணு ஆயுத சக்தியை தொடர்ந்து வலிமைபடுத்துவோம். வடகொரியா அதிரடி
ஐ.நா சபை மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து அணுகுண்டு பரிசோதனை செய்து வரும் வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில் தனது அணு ஆயுத சக்தியை தொடர்ந்து வலிமைபடுத்த போவதாகவும் வடகொரியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வெள்ளியன்று ஐந்தாவது முறையாக வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தியது. உலகையே அதிர்ச்சி அடைய செய்த இந்த சோதனை காரணமாக வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தி வருகிறார்.
இதுகுறித்து வடகொரியா பதிலளித்தபோது, பொருளாதார தடை விதிக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுவது அர்த்தமற்றது, நகைப்புக்குரியது என்று தெரிவித்துள்ளது.