306 கைதிகளை விடுதலை செய்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா

306 கைதிகளை விடுதலை செய்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா
201512040548392330_Firing-on-aid-workers-in-the-United-States-Obama-condemned_SECVPF
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் இன்னும் ஒருசில மாதங்களில் முடிவடையவுள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்காக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த அதிபர் போட்டியில் ஹிலாரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.

இந்நிலையில் தனது பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் சிறுசிறு குற்றங்கள் செய்து தண்டனை அனுபவித்து வரும் ஜெயில் கைதிகள் 306 பேர்களை விடுவிக்க ஒபாமா உத்தரவிட்டுள்ளாஅர்.

அமெரிக்காவில் உள்ள முக்கிய சிறைச்சாலைகளுக்கு அவரே நேரில் சென்று கொடிய குற்றங்கள் இல்லாத போதைப்பொருள் பயன்படுத்தியது உள்பட சிறு குற்றங்களில் ஈடுபட்டு அதன் காரணமாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து, சிறையில் இருந்து விடுவித்துள்ளார்.

110 ஆயுள் தண்டனை கைதிகள் உள்பட 306 பேரை விடுதலை செய்து ஒபாமா இன்று உத்தரவிட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து, தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள ஒபாமா, ‘வன்முறைசாராத சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை போன்ற அதிகபட்ச தண்டனை விதித்து சிறைகளில் அடைத்து வைப்பதில் அர்த்தமில்லை என நான் கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply