ஹிரோஷிமா குண்டுவீச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது. ஒபாமா திட்டவட்டம்

ஹிரோஷிமா குண்டுவீச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது. ஒபாமா திட்டவட்டம்

201512040548392330_Firing-on-aid-workers-in-the-United-States-Obama-condemned_SECVPFகடந்த 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி ஆகிய இரண்டு நகரங்களின் மீது முதல்முறையாக அணுகுண்டை வீசியது. இதில் சுமார் 1.5 லட்சம் அப்பாவி மக்கள் பலியாகினர்.

இந்த சம்பவத்துக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜப்பான் மக்களும், ஜப்பான் ஊடகங்களும் தொடர்ந்து வற்புறுத்தி வரும் நிலையில் இதுவரை பதவியில் இருந்த அமெரிக்க அதிபர்கள் மன்னிப்பு கேட்க முடியாது என மறுத்து வந்தனர்.

இந்நிலையில் ஆசிய நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் ஜப்பானுக்கு செல்லவுள்ளார். அங்கு அணுகுண்டு வீச்சால் தரைமட்டமான ஹிரோஷிமா நகரில் நடைபெறும் பொருளாதாரத்தில் வளர்ந்த ஏழுநாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி-7 எனப்படும் நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

ஹிரோஷிமா சம்பவத்துக்கு ஒபாமா மன்னிப்பு கேட்பாரா என்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒபாமா “இதுதொடர்பாக, கேள்வி எழுப்புவதும், ஆய்வு செய்வதும் வரலாற்று ஆசிரியர்களின் பணியாகும். ஏனெனில், போர்க்காலங்களின் இடையில் பதவியில் இருக்கும் தலைவர்கள் அனைத்துவகையான முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் படைத்தவர்களாக உள்ளனர் என்பதை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயம் நமக்குள்ளது.

தங்களது பதவிக்காலங்களில் குறிப்பாக போர்க்காலங்களில் ஒவ்வொரு தலைவரும் மிக கடினமான முடிவுகளை எடுக்க நேரிடுகிறது என்பதை அதைப்போன்றதொரு பதவியில் கடந்த ஏழரை ஆண்டுகளாக அமர்ந்திருப்பவன் என்ற வகையில் என்னால் அறிந்து கொள்ள முடிகிறது’ என்று கூறி மறைமுகமாக மன்னிப்பு கேட்க முடியாது என்பதை அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Leave a Reply