கடந்த மாதம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சென்று அந்நாட்டு அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசியதை தொடர்ந்து தற்போது இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க இந்தியா வருமாறு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அழைப்பு விடுத்தார்.
நேற்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பகிர்வில், வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபராக ஒபாமாவுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஏற்று அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவுக்கு வருகை தருவார் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
அதிபர் ஒபாமா இந்திய குடியரசு தின விழாவில் கலந்துகொண்டால் சுதந்திர இந்தியாவில் குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை பெறுவார் என கூறப்படுகிறது.