முதல்முறையாக அமெரிக்காவில் உள்ள மசூதிக்கு செல்கிறார் ஒபாமா

முதல்முறையாக அமெரிக்காவில் உள்ள மசூதிக்கு செல்கிறார் ஒபாமா
201512040548392330_Firing-on-aid-workers-in-the-United-States-Obama-condemned_SECVPF
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் இன்னும் ஒருசில மாதங்களில் முடிவடையவுள்ள நிலையில் முதல்முறையாக  வாஷிங்டனில் உள்ள மசூதிக்கு அவர் செல்லவுள்ளதாக அமெரிக்க அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா வெளிநாட்டுகளுக்கு சுற்றுப் பயணங்கள் செய்த போது பல்வேறு மசூதிகளுக்குச் சென்றிருந்தாலும், அமெரிக்காவிலுள்ள மசூதிக்கு அவர் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறியதாவது:

தலைநகர் வாஷிங்டனை ஒட்டி அமைந்துள்ள மசூதிக்கு அதிபர் ஒபாமா இன்று செல்லவிருக்கின்றார். அங்கு பிரார்த்தனைக்குப் பிறகு நடைபெறும் விருந்திலும் அவர் கலந்து கொள்கிறார்.

அமெரிக்காவுக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பை சிறப்பிக்கவும், அனைத்து மதத்தினருக்கும் தங்களது மதத்தைப் பின்பற்றும் சுதந்திரம் அமெரிக்காவில் உள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும் அவர் மசூதி செல்கிறார். வேற்றுமையில் ஒற்றுமை காணும் அமெரிக்காவில், அண்மைக் காலமாக எழுந்துள்ள அரசியல் சர்ச்சைகளால் மதச் சுதந்திரம் கேள்விக் குறியாகியுள்ளது. அத்தகைய சந்தேகங்களைப் போக்கும் வகையில் அதிபர் ஒபாமா மசூதிக்குச் செல்வது முக்கியத்துவம் பெறுகிறது” என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிபர் பதவி வேட்பாளர் தேர்வுக்குப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட சில வேட்பாளர்கள் முஸ்லிம் விரோதக் கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில் ஒபாமா மசூதிக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply