2015ஆம் ஆண்டில் ஒபாமாவின் வருமானம் எவ்வளவு தெரியுமா?

2015ஆம் ஆண்டில் ஒபாமாவின் வருமானம் எவ்வளவு தெரியுமா?

201512040548392330_Firing-on-aid-workers-in-the-United-States-Obama-condemned_SECVPFஅமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவி வரும் நவம்பரில் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்வு செய்தற்கான தீவிர ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல் ஒபாமா ஆகிய இருவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டில் 4 லட்சத்து 36 ஆயிரத்து 65 டாலர் (சுமார் ரூ.2 கோடியே 88 லட்சம்) வருமானம் கிடைத்துள்ளது என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் ஜோஷ் எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.

இந்த வருமானத்திற்காக இருவரும் சேர்ந்து 81 ஆயிரத்து 472 டாலர் (சுமார் ரூ.54 லட்சம்) வருமான வரி செலுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஒபாமா தம்பதியர் தங்களது மொத்த வருமானத்தில் 14.7 சதவீதம் தொகையை 34 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply