போராம்பூர்: ஒடிசாவில் பைலின் புயல் அடித்தபோது பிறந்த பல குழந்தைகளுக்கு புயலின் பெயரை பெற்றோர் சூட்டியுள்ளனர்.கடந்த 12ம் தேதி ஒடிசா, ஆந்திரா மாநிலங்களுக்கு இடையில் பைலின் புயல் கரைகடந்தது. 12 ம் தேதியில் புயல் வீசிய இரவு 8.22 முதல் 10.15க்குள் ஒடிசா மருத்துவமனைகளில் மொத்தம் 27 குழந்தைகள் பிறந்தன. எம்கேசிஜி மருத்துவமனையில் 7, கிரிஸ்டியன் மருத்துவமனையில் 17, சிட்டி மருத்துவமனையில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன. தன் பெண் குழந்தைக்கு பைலின் என பெயர் வைக்கப்போவதாக லலிதா என்பவர் தெரிவித்துள்ளார்.பைலின் புயல் கரைகடந்த நேரத்தில் பிறந்த குழந்தைகள் என்பதால் பைலின் பெயரை வைக்கப்போவதாக மேலும் சில பெற்றோர் தெரிவித்தனர். பைலின் என்பது புயலுக்கு தாய்லாந்து சூட்டிய பெயர். இதற்கு நீலக்கல் என்று அர்த்தம்.