வடகொரியாவின் மிரட்டலையும் மீறி ஆன்லைனில் ‘தி இண்டர்வியூ’ என்னும் திரைப்படத்தை நேற்று சோனி நிறுவனம் வெளியிட்டது.
சோனி நிறுவனம் தயாரித்த தி இண்டர்வியூ என்னும் திரைப்படம் வடகொரியா அதிபரை இண்டர்வியூ செல்வதுபோல் நடித்து அவரை கொலை செய்யும் கதையை கொண்டது. இந்த படத்தை வெளியிட வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடகொரியா ஹேக்கர்கள் சோனி நிறுவனத்தின் கம்ப்யூட்டர்களில் புகுந்து பல முக்கிய தகவல்களை திருடி மிரட்டினர்.
மேலும் தி இண்டர்வியூ திரைப்படத்தை வெளியிட்டால் அமெரிக்காவின் பெண்டகன் உள்பட பல முக்கிய பகுதிகளை தாக்குவோம் என வடகொரியா மிரட்டல் விடுத்தது.
இதனால் கடும்கோபம் அடைந்த ஒபாமா வடகொரியாவுக்கு கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் வடகொரியாவின் மிரட்டலையும் மீறி நேற்று ஆன்லைனில் சோனி ‘தி இண்டர்வியூ’ திரைப்படத்தை வெளியிட்டது.
ஸ்டிரிமிங் முறையில் இந்த படம் ஆன்லைனில் வெளியாகி இருக்கிறது. படத்தை 5.99 டாலருக்கு ஒரு முறை பார்க்கலாம். 14.99 டாலர் செலுத்தி அதன் டிஜிட்டல் நகலை பெற்றுக்கொள்ளலாம் . சோனி இதற்காக seetheinterview.com எனும் இணையதளத்தை அமைத்துள்ளது. இது தவிர கூகுளின் யூடியூப் மூவி சேனல் மற்றும் மைக்ரோசாப்டின் எக்ஸ்பாக்ஸ் சேவைகள் மூலம் கட்டணம் செலுத்தி பார்க்கலாம். கருத்து சுந்ததிரத்தை காக்கும் வகையில் சோனியுடன் இணைந்து இந்த படத்தை ஆன்லைனில் வெளியிட்டுள்ளதாக கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளன. முதல் கட்டமாக அமெரிக்காவில் மட்டும் படத்தை காணலாம்.