லட்சத்தீவு அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி. மீண்டும் மழை பெய்யுமா?
சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து ஏற்பட்ட வெள்ளத்தால் இன்னும் பல இடங்கள் தண்ணீரால் மூழ்கியிருக்கும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று லட்சத்தீவு அருகே நிலை கொண்டிருப்பதாகவும் இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், “மேலடுக்கு சுழற்சியானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி லட்சத்தீவு அருகே நிலை கொண்டுள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்யும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேவேளையில் தெற்கு ஆந்திராவில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மறைந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.