உயிர்களை விட பாமாயில் பெரிதா? ஈவு இரக்கமின்றி செயல்பட்ட பெரம்பலூர் பொதுமக்கள்.

Oil lorry01  பெரம்பலூர் அருகே எண்ணெய் லாரி ஒன்று திடீரென கவிழ்ந்ததால் அதன் டிரைவரும் கிளீனரும் உயிருக்கு போராடிய நிலையில் துடித்துக்கொண்டிருக்க அந்த பகுதி மக்கள் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் லாரியில் இருந்து கொட்டியை எண்ணெயை பிடித்து செல்வதில் குறியாக இருந்ததாக அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

நேற்று இரவு சென்னையிலிருந்து தனியார் டேங்கர் லாரி ஒன்று பாமாயில் எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு, திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து. சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது.

Oil lorry03

இந்த விபத்து காரணமாக டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய இருவரும் உயிருக்கு போராடியவாறு துடித்துக்கொண்டிருக்கும் நிலையில், அந்த பகுதி மக்கள் காயமானவர்களை காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் தங்கள் வீடுகளில் இருந்து குடம் மற்றும் கேன்களை எடுத்து வந்து லாரியில் இருந்து கொட்டிக்கொண்டிருக்கும் பாமாயிலை பிடிப்பதிலேயே குறியாக இருந்தனர்.

பின்னர் அரைமணி நேரம் கழித்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து, உயிருக்கு போராடி கொண்டிருந்த டிரைவர் மற்றும் கிளீனரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

oil lorry02

கொஞ்சம் கூட மனிதாபிமானம் இன்றி பாமாயிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இரண்டு உயிர்களுக்கு கொடுக்க தவறிய அந்த பகுதி மக்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply