சவுதி அரேபியாவில் அறிமுகமாகியிருக்கும் ‘பாவத்துக்கான வரி’
கச்சா எண்ணெயால் செல்வத்தில் செழித்து இருக்கும் சவுதி அரேபியா உள்பட அரபுநாடுகள் அனைத்தும் பொதுமக்களிடம் இருந்து பல வருடங்களாக வரிகள் வாங்குவதே இல்லை. இந்த நிலையில் முதன்முதலாக பொதுமக்களிடம் இருந்து வரி வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
‘பாவத்துக்கான வரி’ என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வரி சிகரெட் புகைப்பவர்களுக்காக விதிக்கப்பட்டுள்ளது. சிகரெடுக்கு மட்டுமின்றி கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களுக்கும் இந்த வரி பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரி காரணமாக விலை இருமடங்காக அதிகரிக்க இருப்பதால், பெருமளவு இலாபம் ஈட்டுவதற்காக பல வர்த்தகர்கள் சிகெரெட்டுகளை பதுக்கி வைக்கத் தொடங்கியிருப்பதாக சவுதி அரேபியாவின் உள்ளூர் ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன.