லட்சச்க்கணக்கில் செத்து மிதக்கும் கடல்வாழ் உயிரினங்கள். பீட்டா தூங்குகிறதா?
விலங்குகள் நலனுக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொள்ளும் பீட்டா, கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியதால் மீன்கள் உள்பட லட்சக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றதே, பீட்டா என்ன தூங்குகிறதா? என பொதுமக்கள் டுவிட்டர் மூலம் கேள்வி கேட்டு வருகின்றனர்.
தமிழினத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை தடை செய்ய லட்சக்கணக்கில் செலவு செய்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று தடை வாங்கிய பீட்டா மற்ற உயிரினங்கள் குறித்து கவலை கொள்ளாமல் இருப்பது ஏன்? குறைந்தபட்சம் கடலை சுத்தப்படுத்தவாவது பீட்டா உதவியிருக்கலாம் அல்லவா?
ஆனால் அங்கு அரசு அதிகாரிகளுக்கு உதவி செய்வது எங்கள் மாணவர்கள். மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் போராடவில்லை, மற்ற உயிரினங்களுக்காகவும் போராடுகின்றனர் என்பது உண்மையான சான்று இதுதான். ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்று மல்லுக்கட்டிய பீட்டா அமைப்பினர் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை என்று டுவிட்டரில் பீட்டா அமைப்பை பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.