4 கருப்பின பெண்களை பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரிக்கு 263 ஆண்டுகள்

4 கருப்பின பெண்களை பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரிக்கு 263 ஆண்டுகள்

rape 1 ஜெயில் அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா என்ற பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் நான்கு கருப்பின பெண்களை பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு 263 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அளித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒக்லஹாமா நகரில் கடந்த சில வருடங்களாக காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வரும் 29 வயது Daniel Holtzclaw என்பவர் கடந்த டிசம்பர் மாதத்தில் நான்கு கருப்பின பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த பெண்கள் அனைவரும் 18 முதல் 36 வயதுகளை உடையவர்கள். இந்த பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் Daniel Holtzclaw மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நடந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

காவல்துறை அதிகாரி Daniel Holtzclaw நான்கு பெண்களை பலாத்காரம் செய்யப்பட்டது சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 263 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதாக நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். இந்த தீர்ப்பால் ஒக்லஹாமா பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Chennai Today News: Oklahoma police officer sentenced to 263 years in prison for raping 4 black women while on duty

rape

Leave a Reply