பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை ரிசர்வ் வங்கியிலும் மாற்ற முடியாது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை ரிசர்வ் வங்கியிலும் மாற்ற முடியாது.

மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த பின்னர் இந்த ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும் மார்ச் 30 வரை ரிசர்வ் வங்கியில் மாற்றி கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் டிசம்பர் 30ஆம் தேதி முடிவடைந்துவிட்ட நிலையில் ஜனவரி 1ஆம் தேதி முதல் பொதுமக்கள் ரிசர்வ் வங்கிக்கு சென்று பழைய நோட்டுக்களை மாற்ற குவிந்தனர்.

ஆனால் ரிசர்வ் வங்கி செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்றி தர மறுத்துவிட்டது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘சமீபத்தில் மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்தின்படி இனிமேல் ரிசர்வ் வங்கிகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாது. வௌிநாடு வாழ் இந்தியர்களுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றித் தரப்படுகிறது. அதிலும் நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பி வந்தவர்கள் மட்டும்தான் தங்களிடம் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும்’ என்று கூறினார்.

Leave a Reply