புற்றுநோய் தாக்குதலை தடுக்கும் ஆலிவ் ஆயில்

5e81606b-0137-4b6a-ac08-2fd7184bdac2_S_secvpf

ஆலிவ் எண்ணெயானது மற்ற எண்ணெயை விட மிகவும் ஆரோக்கியமான எண்ணெய். இந்த எண்ணெய் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மட்டுமின்றி, அழகை அதிகரிக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போமா!!!

இதய நோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெயானது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுவதுடன், உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கவும் உதவும். இப்படி இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை குறைந்தால், இதய நோய் வருவது தடுக்கப்படும். நீரிழிவைத் தடுக்கும் ஆலிவ் ஆயிலில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளது.

இவை சர்க்கரை நோயை அண்டவிடாமல் தடுக்கும். அதிலும் தினமும் உணவில் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயிலை சேர்த்து வந்தால், 50% நீரிழிவு வரும் அபாயம் குறையும் என்று ஆய்வு ஒன்று நிரூபித்துள்ளது. புற்றுநோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் ஆலிவ் எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது.

இதில் உள்ள வைட்டமின் ஈ மிகவும் சக்தி வாய்ந்த வைட்டமின். இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்து வந்தால், புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். அதிலும் தினமும் 2 ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து வருவதால், மூளையின் சக்தி அதிகரிப்பதோடு, உடலும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இருக்கும்.

இரத்த ஓட்டத்தை சீராக்கும் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க வைட்டமின் ஈ மிகவும் முக்கியமானது. இத்தகைய வைட்டமின் ஈ ஆலிவ் ஆயிலில் அதிகம் உள்ளது. எனவே இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த ஓட்டம் சீராக இருந்து, உடலானது பொலிவோடு அழகாக இருக்கும்.

மேலும் உறுப்புக்களும் சீராக செயல்படும். எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆலிவ் எண்ணெயானது கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே இதனை உணவில் சேர்த்தால், எலும்புகளின் ஆரோக்கியமானது மேம்படும்.

Leave a Reply