ஒலிம்பிக் கமிட்டி துணை தலைவருக்கே கொரோனா பாதிப்பு: ஒலிம்பிக் எப்படி நடக்கும்?
ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டியின் துணைத்தலைவரான கோசோ தஷிமாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஜப்பானில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டி தள்ளிப்போக அல்லது ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டி நடத்தலாமா? வேண்டாமா? என்று ஆலோசனை செய்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் கமிட்டியின் துணைத்தலைவரான கோசோ தஷிமாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒலிம்பிக் கமிட்டியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.