ஓமன் நாட்டில் வரலாறு காணாத புயல்: 3 இந்தியர்கள் உள்பட 11 பேர் பலி
Oman cyclone, 11 deadஅரபிக்கடலில் உருவான மெகுனு என்ற வலிமையான புயல் தெற்கு ஓமன் மற்றும் ஏமன் நாடுகளை பயங்கரமாக தாக்கி பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏமனில் உள்ள சொகோட்ரா தீவில் மணிக்கு 170 கி.மீ. வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியதுடன் கனமழை பெய்ததால் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
இந்த நிலையில் மெகுனு புயலில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 3 பேர் இந்தியர்கள் என்று மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதில் ஒருவரது பெயர் ஷாம்சர் அலி. மாயமான மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
புயல், மழையால் பாதிக்கப்பட்ட 145 இந்தியர்களும், 315 வங்காளதேசத்தை சேர்ந்தவர்களும் சலாலாவில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
Video: Tropical Cyclone Mekunu causes major flooding and damage in Oman. At least 10 people are dead and dozens others are missing. https://t.co/egqU7ACTCn
— PM Breaking News (@PMBreakingNews) May 26, 2018