இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் நேற்று ஒரே நாளில் 30 பேர்களுக்கு பரவி உள்ளது என்பதும் இதனை அடுத்து இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று ஒரே நாளில் 4 மாநிலங்களில் 30 பேர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக மகாராஷ்டிரா, டில்லி, ராஜஸ்தான், கர்நாடகா, தெலுங்கானா, குஜராத், தமிழகம், ஆந்திரா, சண்டிகர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரான் மிக வேகமாக பரவி வருவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
இதே ரீதியில் சென்றால் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் இந்தியாவிலும் ஒமிக்ரான் மூன்றாவது அலை இந்தியாவில் உருவாக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.