பயணிகளோடு பயணியாக பயணம் செய்த முன்னாள் முதல்வர்
முன்னாள் முதல்வராக இருந்தாலும் இந்நாள் முதல்வராக இருந்தாலும் அவர் பயணம் செய்யும்போது ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அப்பாவி பொதுமக்கள் அவஸ்தைப்படுவதைத்தான் நாம் இதுவரை பார்த்துள்ளோம். ஆனால் கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பயணிகளோடு பயணியாக பேருந்தில் பயணம் செய்துள்ளார். பொதுமக்கள் அவரை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
நேற்று முன் தினம் கொல்லம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த திருவனந்தபுரம் பேருந்தில் முன்னாள் முதல்வர் ஏறி அமர்ந்துள்ளார். முன்னாள் முதல்வர் தன்னுடைய பேருந்தில் ஏறியதை கண்டதும் கண்டக்டருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இருப்பினும் சுதாரித்து கொண்டு அவரிடம் இரண்டு டிக்கெட்டுக்களை கண்டக்டர் கொடுக்க, செக்யூரிட்டிக்கு மட்டும் டிக்கெட் கொடுங்க, எனக்கு பாஸ் இருக்கின்றது என்று கூறி ஒரு டிக்கெட்டை திருப்பி கொடுத்துவிட்டார்.
மேலும் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஆச்சரியம் அடைந்து அவருடன் அரசியல் பேசவும், கைகுலுக்கவும், செல்பி எடுக்கவும் என கலகலப்பாக பயணம் செய்தனர். இதுமாதிரி ஒரு நிகழ்வு தமிழகத்தில் நடக்குமா? என்று இந்த செய்தியை படிக்கும்போதே ஏக்கம் வருகின்றதா?