மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே என்ற பகுதியில் போலீஸார் இருவர் நடன அழகிகளுடன் பார் ஒன்றில் ஆபாச நடனம் ஆடியதாக வந்த தகவல் போலீஸ் உயரதிகார்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இரண்டு போலீஸார்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை தானே காவல்துறை இணை கமிஷனர் வி.வி.லஷ்மி நாராயணன் அவர்களின் செல்போனுக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு வீடியோ காட்சி வந்தது. அதில், இரு போலீஸ்காரர்கள் பாரில் அழகிகளுடன் கட்டிப்பிடித்து முத்தமிட்டு ஆபாச நடனம் ஆடும் காட்சி பதிவாகி இருந்தது. இதை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்து அழகிகளுடன் ஆபாச நடனம் ஆடிய இரண்டு போலீஸ்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க துணை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் அடிப்படையில் துணை கமிஷனர் நடத்திய விசாரணையில், அந்த வீடியோ காட்சியில் இருந்தபடி இரண்டு போலீஸார்களும் நடனம் ஆடியது உண்மை என தெரியவந்தது. தானே மான்பாடா காவல் நிலையத்தில் ஏட்டுகளாக பணி புரியும் சஞ்சய் பாபர் மற்றும் ரஷித் முலானி ஆகிய இருவர்தான் வாட்ஸ் அப் வீடியோவில் பதிவானவர்கள் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டதால் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக துணை கமிஷனர் உத்தரவிட்டார்.
வேலியே பயிரை மேயும் வகையில் பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய போலீசாரே ஆபாச நடனம் ஆடிய சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
https://www.youtube.com/watch?v=EYweJCbvhEM