நவம்பர் 13ஆம் தேதி பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து ராணி விருந்து

நவம்பர் 13ஆம் தேதி பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து ராணி விருந்து
modi
பாரத பிரதமாராக பதவியேற்றதில் இருந்து ‘உலகம் சுற்றும் வாலிபனாக’ பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து பல ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் நரேந்திர மோடி, அடுத்த பயணமாக வரும் நவம்பர் 12 முதல் 14 வரை இங்கிலாந்து நாட்டுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செல்கிறார்.

மோடியின் இங்கிலாந்து பயண விபரங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளாவது:

நவம்பர் 12: இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூடன் சந்திப்பு. இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து. பின்னர் இரு தலைவர்களும் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே நடந்தபடி பேச்சு நடத்துவார்கள். அதன் பிறகு பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து பாராளுமன்ற சபாநாயகர் சிறப்பான வர வேற்பு கொடுக்க உள்ளார். அப்போது இங்கிலாந்து எம்.பி.க்கள், இந்திய வம்சா வழி எம்.பி.க்களுடன் மோடி பேசவுள்ளார்.

நவம்பர் 13: மதியம் லண்டனில் உள்ள பங்கிங்காம் அரண்மனைக்கு மோடி செல்கிறார். அங்கு அவருக்கு ராணி இரண்டாம் எலிசபெத் விருந்து அளிக்க உள்ளார். இந்த சிறப்பு விருந்துக்காக இப்போதே தடபுடல் ஏற்பாடுகள் ஆரம்பமாகிவிட்டது. இந்த விருந்து முடிந்ததும் எலிசபெத் ராணியுடன் மோடி சிறிது நேரம் பேச்சு நடத்துவார். இருவரும் நினைவுப் பரிசுகளை பரிமாறி கொள்வார்கள். இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பங்கிங்காம் அரண்மனையில் விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் மோடி வெம்பளி ஸ்டேடியத்துக்கு செல்வார். அங்கு பிரமாண்ட கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க சுமார் 60 ஆயிரம் பேர் தங்கள் பெயர்களை ஏற்கனவே முன் பதிவு செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள இந்தியர்கள் மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டுக்காரர்களும் மோடி பேச்சை கேட்க திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்டேடியத்துக்கு மோடி வரும் போது ஒலிம்பிக் போட்டி ஸ்டைலில் வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.

நவம்பர் 14: வடக்கு லண்டனில் உள்ள அம்பேத்கார் வசித்து வீட்டுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். அம்பேத்கார் நினைவிடத்தை அவர் திறந்து வைப்பார். பிறகு 12ஆம் நூற்றாண்டு தத்துவஞானி பரவேஸ்வராவின் சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

அத்துடன் பிரதமர் மோடியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் நிறைவு பெறும். அதன் பிறகு மோடி ஜி-20 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்காரா நாட்டுக்கு புறப்பட்டுச் செல்வார்

Leave a Reply