24 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ரூபாய் நோட்டு. மத்திய அரசு முடிவு

 

re 1 note20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் 1 ரூபாய் நோட்டுகளை அச்சிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய கரன்சிகளில் 1 ரூபாய், 2 ரூபாய் நோட்டுக்களை யாரும் கண்டுகொள்ளாத  நிலை இதுவரை இருந்தது. இவற்றை நாணயமாக மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்தனர்.  1 ரூபாய், 2 ரூபாய் தாள்களை அச்சடிப்பதற்கான செலவு அதிகரித்தன் காரணமாக 1 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை மத்திய அரசு நிறுத்தியது.

இதைத்  தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதும் நிறுத்தப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் 5 ரூபாய் தாள்கள் அச்சடிப்பதும் நிறுத்தப்பட்டது.

இவற்றுக்குப் பதிலாக  நாணயங்கள் தயாரித்து வெளியிடப்பட்டன. ஆனால் சமீப காலமாக நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு ரூபாய், 2 ரூபாய் நாணயங்களை மொத்தமாக வாங்கி உருக்கி விடுவதாகக் கூறப் படுகிறது.

இந்நிலையில் மக்கள் மத்தியில், ரூபாய் நோட்டுகள் புழக்கம் பற்றி  ஆய்வு செய்த மத்திய அரசு நோட்டுகளின் புழக்கம் குறையாமல் இருப்பதை அறிந்து நாணயங்களுக்கு பதில் மீண்டும் 1 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி  வரும் 1ஆம்  தேதி முதல் 1 ரூபாய் நோட்டு அச்சடிக்கப் படவுள்ளது.

இதன் காரணமாக ஒரு ரூபாய் நோட்டுகள் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதிக அளவில் புழக்கத்துக்கு வர உள்ளது. 1994 ஆம் ஆண்டு வரை அச்சடிக்கப்பட்ட 1 ரூபாய் நோட்டுகள் இண்டிகோ நிறத்தில் இருந்தது.

தற்போது அந்த நிறத்தை  மாற்ற திட்டமிட்டுள்ளனர். அதன்படி புதிய 1 ரூபாய் நோட்டுகள் பச்சை மற்றும் இளஞ் சிவப்பு வண்ணத்தில்  இருக்கும். அதில் 1 ரூபாய்க்கான அரசு முத்திரையும், அதன்கீழ் இந்திய அரசு என்றும் அச்சிடப்பட்டிருக்கும்.

Leave a Reply