ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் குடிதண்ணீர் பாட்டில்: ரயில்வே அமைச்சகம் திட்டம்

ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் குடிதண்ணீர் பாட்டில்: ரயில்வே அமைச்சகம் திட்டம்

ரயில் பயணிகளுக்காக ஒரு ரூபாயில் ஒரு லிட்டர் குடிதண்ணீர் பாட்டிலை விநியோகம் செய்ய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் பெரிதும் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ரயில் நீர் என்ற ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ.10க்கு ரயில்வே பயணிகளுக்காக வழங்கப்பட்டு வரும் நிலையில் வெகுவிரைவில் இதே தரத்துடன் கூடிய ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் 450 ரயில் நிலையங்களில் 1,100 குடிநீர் வழங்கும் இயந்திரங்களை அமைக்க, மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டம் முடித்து வைக்கப்படும் என்றும், இதன் மூலம் ரயில் பயணிகளுக்கு, ஒரு பாட்டில் குடிநீர் ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் நம்பிக்கை தெரிவத்துள்ளது.

Leave a Reply