ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பைக்: ஆச்சரியம் அடைந்த ஆர்டிஓ

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பைக்: ஆச்சரியம் அடைந்த ஆர்டிஓ

தென்காசி ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்ய வந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பைக் ஒன்றை பார்த்து ஆர்டிஓ ஆச்சரியம் அடைந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது இந்தியாவில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த ஹோண்டா கோல்டு கிங் என்ற புதிய மாடல் பைக் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆப்பிள் கார் பிளே வசதி மற்றும் ரிவர்ஸ் கியர் வசதி கொண்ட இந்த பைக்கின் பலர் ஆச்சரியத்துடன் பார்த்தனர்

ஆனால் இதன் விலை ஒரு கோடி ரூபாய் என்பதால் வெகு சிலர் மட்டுமே இந்த பைக்கை வாங்கி இருப்பதாக தெரிகிறது

இந்த நிலையில் தென்காசியை சேர்ந்த ஒருவர் இந்த பைக்கை வாங்கி ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்ய வந்தார். இந்த பைக்கை கண்ட ஆர்டிஓ ஆச்சரியத்துடன் சுற்று சுற்றி பார்த்து மகிழ்ந்தார்

அவர் மட்டுமின்றி அந்த அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அந்தப் பைக்கை மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தனர். தமிழகத்தின் தென்கோடி உள்ள ஒரு பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பைக்கை ஒருவர் வாங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply