என்.டி.டி.விக்கு தடை விதித்த மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
இந்தியா தொலைக்காட்சி பொறுப்பற்ற முறையில் தீவிரவாதிகளுக்கு பல தகவல்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்படடது. இதற்காக அந்த தொலைக்காட்சி சேனல் வரும் 9ஆம் தேதி பின்னிரவு 12-01 மணியில் இருந்து 10-ம் தேதி பின்னிரவு 12-01 மணிவரை ஒளிபரப்பு மற்றும் மறுஒளிபரப்புக்கு 24 மணிநேர தடைவிதித்து நேற்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை முதலில் இந்திய செய்தி ஆசிரியர்கள் சங்கம் கடுமையாக எதிர்த்தது. மத்திய அரசு தனது உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்திய தற்போது முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சூரி கூறுகையில், “இதன் மூலம் கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இது அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி ஆகும். நம்முடைய ஜனநாயகத்தில் ஏற்றுக் கொள்ளமுடியாதது” என்றார்.