ஒரு ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் போதாதா? எதுக்கு நான்கு ஹீரோயின். ஜோதிகா

ஒரு ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் போதாதா? எதுக்கு நான்கு ஹீரோயின். ஜோதிகா

தற்போதைய கோலிவுட் படங்களில் மாஸ் ஹீரோக்களுக்கு குறிப்பாக அஜித், விஜய் படங்களில் இரண்டு ஹீரோயின் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. தற்போது தயாராகி வரும் ‘தளபதி 61’ படத்தில் காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யாமேனன் என மூன்று ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ‘மகளிர் மட்டும்’ இசை விழாவில் பேசிய ஜோதிகா, ‘ஒரு ஹீரோவுக்கு நான்கு ஹீரோயின்கள் வைத்தால் இளைஞர்களும் நான்கு கேர்ள் பிரண்ட் வைத்து கொள்ள முயற்சி செய்வார்கள். ஒரு படத்தில் ஒரு ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் போதும். இரண்டு, மூன்று, நான்கு என போய்க்கொண்டே இருப்பது நல்லதல்ல’ என்று கூறியுள்ளார்

அதேபோல் ‘உங்கள் வீட்டு பெண்கள், உங்கள் அம்மா, தங்கை, தோழிகள் போன்ற கேரக்டரை நடிகைகளுக்கு தாருங்கள். திரைப்படங்களை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதில் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும். திரைப்படங்களில் வரும் டயலாக், ஸ்டைல் , உடை ஆகியவற்றை கோடிக்கணக்கான இளைஞர்கள் பின்பற்றுவார்கள். எனவே திரைப்படங்கள் பொறுப்புடன் தயாரிக்கப்பட வேண்டும்’ என்று இன்றைய இயக்குனர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்

 

Leave a Reply