இறந்த குழந்தை 15 மணி நேரம் கழித்து உயிர் பிழைத்த அதிசயம்

இறந்த குழந்தை 15 மணி நேரம் கழித்து உயிர் பிழைத்த அதிசயம்
baby
சீனாவில் உள்ள ஒருமாத குழந்தை உடல்நலக்குறைவால் இறந்து அதன்பின்னர் 15 மணி நேரம் கழித்து மீண்டும் உயிர்பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. இந்த குழந்தையை தெய்வக்குழந்தை என்றே என அப்பகுதி மக்கள் அழைத்து வருகின்றனர்.

சீனாவில் உள்ள ஷைஜியங் என்ற மாகாணத்தில் வாழும் தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று  குறை மாதத்தில் பிறந்ததால் அந்தக் குழந்தையை மருத்துவர்கள் இன்குபெட்டர் கருவியில் 23 நாட்கள் வைத்து பாதுகாத்து வந்தனர். பின்னர் ஓரளவு உடல்நலம் தேறியதும் அந்த குழந்தையின் பெற்றோர் வீட்டிற்கு குழந்தையுடன் சென்றனர். ஆனால் திடீரென குழந்தையின் உடல்நிலை மோசம் அடைந்ததால் அக்குழந்தையை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சையின் பலனின்றி அந்த குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதன்பின்னர் சீன நாட்டு சட்டப்படி குழந்தையின் சடலம் 15 மணி நேரம் பிண அறையில் வைக்கப்பட்டு பின்னர் பெற்றொர்களிடம் ஒப்படைக்கப்பட்டது., குழந்தையின் உடலை இறுதிச்சடங்கு செய்ய பெற்றோர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்த குழந்தையிடம் இருந்து முனகல் சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்து அந்த குழந்தையை காப்பாற்றியுள்ளனர். தற்போது அந்த குழந்தை நலமாக இருப்பதாகவும், தங்கள் குழந்தை மீண்டும் கிடைத்ததில் தங்களுக்கு பெரும் மகிழ்ச்சி என்றும் பெற்றோர் கூறியுள்ளனர். 15 மணி நேரம் பிணவறையில் வைக்கப்பட்டு பின்னர் உயிர் பிழைத்துள்ள இந்த குழந்தையை அப்பகுதி மக்கள் கடவுளின் குழந்தையாகவே கருதி வருகின்றனர்.

Chennai Today News: One month-old baby declared dead and kept in a morgue for 15 hours wakes up crying minutes before being CREMATED

 baby1 baby2 baby3

Leave a Reply