மேலும் ஒரு வங்கி மோசடி: ரூ.200 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு

மேலும் ஒரு வங்கி மோசடி: ரூ.200 கோடி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு

தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர்களை அடுத்து டெல்லியை சேர்ந்த வைரநகை ஏற்றுமதி நிறுவனம் ஒன்று ரூ.390 கோடி, ஓரியண்டல் காமர்ஸ் வங்கியில் மோசடி செய்ததாக சிபிஐயிடம் புகார் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி நேற்று வெளியானது

இந்த நிலையில் அதே ஓரியண்டல் வங்கியில் மேலும் ஒரு மோசடி நடந்துள்ளதாக தற்போது செய்தி வெளிவந்துள்ளது. சிம்பாஹோலி சர்க்கரை சுத்திகரிப்பு நிறுவனம் ஒன்று ஓரியண்டல் வங்கியில் ரூ.200 கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக வங்கி மோசடி குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பது பொதுமக்களிடையே வங்கிகள் மீதான நம்பிக்கையை தகர்க்கும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply