அர்னாப் கோஸ்வாமி மீது மேலும் ஒரு வழக்கு. சிக்கலில் ரிபப்ளிக்

அர்னாப் கோஸ்வாமி மீது மேலும் ஒரு வழக்கு. சிக்கலில் ரிபப்ளிக்

ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி மீது ஏற்கனவே அவர் முன்பு வேலை பார்த்த டைம்ஸ் நெள நிறுவனம் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ள நிலையில் தற்போது அதே டைம்ஸ் நெள தொலைக்காட்சி அர்னாப் மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது.

ரிபப்ளிக் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பான சுனந்தா புஷ்கர் உரையாடல் ஆடியோ டேப் தங்களுக்கு சொந்தமானது என்றும் அந்நிறுவனத்தில் அர்னாப் பணியாற்றிய போது அலுவலக விதிகளுக்கு புறம்பாக இந்த ஆடியோ டேப்பை திருடிவிட்டதாகவும், இந்த ஆடியோ டேப் செய்தியை தன்னுடைய பிரத்யேக செய்தி எனக் கூறி ரிபப்பளிக் தொலைக்காட்சியில் ஒளிபர்ப்பியுள்ளதாகவும் டைம்ஸ் நெள தொலைக்காட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது THE NATION WANTS TO KNOW” என்ற சொற்றொடரை அர்னாப் பயன்படுத்தக் கூடாது என்று அத்தொலைக்காட்சி உரிமம் கோரியிருந்தது. ஆனால் அர்னாப் அந்த சொற்றொடரை பயன்படுத்தியுள்ள நிலையில் தற்போது இதுகுறித்து மேலும் ஒரு வழக்கு அர்னாப் கோஸ்சுவாமி மீது தொடரப்பட்டுள்ளது.

Leave a Reply