அரசு டிவிக்கு ரூ.115 கோடி கட்டண பாக்கி. ராஜபக்சே மீது மேலும் ஒரு வழக்கு?

அரசு டிவிக்கு ரூ.115 கோடி கட்டண பாக்கி. ராஜபக்சே மீது மேலும் ஒரு வழக்கு?
rajapakse
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் ராஜபக்சே அந்த தேர்தலில் தோல்வி அடைந்து மீண்டும் ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற அவரது கனவு கலைந்தது மட்டுமின்றி சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் தோல்வி அடைந்ததால் அவரது பிரதமர் கனவும் தகர்ந்தது. இந்நிலையில் கடந்த அதிபர் தேர்தலின்போது மஹிந்தா ராஜபக்சே அரசு டெலிவிஷனில் விளம்பரங்கள் செய்த விளம்பரங்களுக்கு இன்னும் கட்டணம் செலுத்தவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. அரசு டிவிகளுக்கு அவர் செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.115 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜபக்சே தேர்தலின்போது அதிபராக இருந்தால் அவருக்கு குறைந்த அளவு கட்டணமே நிர்ணயிக்கப்பட்டிருந்தும் மொத்தம் ரூ.115 கோடிக்கு அவர் தேர்தல் விளம்பரம் செய்துள்ளார். ஆனால் இந்த கட்டணங்களை ராஜபக்சே செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

ராஜபக்சே ஆட்சியின்போது நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிக்கும் விசேஷ அதிபர் ஆணைக்குழுவின் கவனத்துக்கு இந்த கட்டண பாக்கி கொண்டு செல்லப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து அரசு டெலிவிஷன் முன்னாள் தலைவர் உள்பட 7 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை அரசு தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. இதுதொடர்பான சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை சேகரிக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெறுகிறது.

Leave a Reply