பலி எண்ணிக்கை 85 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் தினமும் ஒரு சிலர் பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில் சற்று முன்னர் வெளியான தகவலின் படி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார்
70 வயதை சேர்ந்த என்ற பெண் கடந்த சில நாட்களாக தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் மரணமடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
நேற்று வரை தமிழகத்தில் 84 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் சென்னையில் மேலும் 550க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் இன்று மாலை சுகாதாரத்துறையினர் தெரிவித்த பின்னர் தான் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது