தேமுதிகவில் இருந்து மேலும் ஒரு மாவட்ட செயலாளர் விலகல்
மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க விஜயகாந்த் முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரகுமார் தலைமையில் ஒருசில மாவட்ட செயலாலர்கள் தேமுதிகவில் இருந்து விலகி மக்கள் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் இன்று திருப்பூர், தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளராக இருந்த கீர்த்தி சுப்பிரமணியம் என்பவரும் விலகியுள்ளார்.
தேமுதிக சார்பில் பல்லடம் தொகுதியில் போட்டியிட இவர் விண்ணப்பம் செய்ததாகௌவ்ம் ஆனால் அந்த தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்து அந்த கட்சியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சற்றுமுன்னர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்து கொண்ட கீர்த்தி சுப்பிரமணியம், தற்போதைய நிலையில் மதிமுக கட்டுப்பாட்டில்தான் தேமுதிக இருப்பதாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘”தேர்தலில் போட்டியிட கண்டிப்பாக சீட் தருவதாக கட்சி தலைமை கூறி இருந்தது. ஆனால், தற்போது பல்லடம் தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நான் ஏமாற்றப்பட்டதால் தி.மு.க.வில் சேர்ந்தேன். தற்போது தேமுதிக, மதிமுக கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்று கூறினார்.
Chennai Today News: One more DMDK district secretart quit