‘விஜய் 60’ படத்தில் இணைந்த இன்னொரு நாயகி
இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் தெறியாக ஹிட்டான நிலையில் அவர் தற்போது ‘விஜய் 60’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதன்முதலாக நெல்லை தமிழ் பேசி நடிக்கும் விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் இன்னொரு நாயாகியாக பிரபல மலையாள நடிகை அபர்ணா வினோத் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
கிராமத்து பெண் கேரக்டரில் நடிக்கும் அபர்ணாவுக்கு இந்த படத்தின் கதைக்கு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் கேரக்டர் என்றும் இந்த படத்திற்கு பின்னர் அபர்ணா தமிழில் ஒரு சுற்று வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ‘அழகிய தமிழ்மகன்’ இயக்குனர் பரதன் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்த படத்தை விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூன் 3 முதல் நடைபெறவுள்ளது என்றும் இந்த படம் வரும் 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.