20ஆக மாறியது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ எண்ணிக்கை 

20ஆக மாறியது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ எண்ணிக்கை 

முதல்வருக்கு எதிராக காய் நகர்த்தி அரசியல் செய்து வரும் தினகரன் அணிக்கு ஏற்கனவே  19 எம்.எல்.ஏக்கள் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு எம்.எல்.ஏ அந்த அணிக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதி. சற்றுமுன் தினகரன் வீட்டில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதனால் தினகரன் அணியின் எண்ணிக்கை 20ஆக மாறியுள்ளது.

இந்த நிலையில் தினகரன் அணியின் 19 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக கொறடா கூறியது முட்டாள்தனமானது என்றும், தாங்கள் எந்த நேரத்திலும் ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக செயல்படவில்லை என்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூறியுள்ளனர்.

மேலும் தங்களை தகுதி நீக்கம் செய்தால் நீதிமன்றம் செல்வோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply