அதிர்ச்சி மேல் அதிர்ச்சி: நீட் தோல்வியால் மேலும் ஒரு மாணவி தற்கொலை
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் ஏற்கனவே விழுப்புரம் மாணவி பிரதீபாவின் மரணத்தையே இன்னும் ஜீரணிக்க முடியாத நிலையில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவல் தமிழர்களின் இதயத்தில் இடியாக உள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியாத விரக்தியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவி இன்று தூக்கு போட்டு பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி நெம்பர் 1 டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் அரசு பேருந்து ஓட்டுநர் கண்ணன். இவரது மகள் சுபஸ்ரீ. இவர் நீட் தேர்வில் 94 மதிப்பெண்கள் எடுத்து தோல்வி அடைந்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்த சுபஸ்ரீ தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை எண்ணிக்கை இனிமேலாவது அதிகரிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெற்றோர்களும் பொறுப்புடன் தங்கள் குழந்தைகளுக்கு நீட் ஒன்றே வாழக்கையல்ல என்பதை புரிய வைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.