ஈராக் நாட்டில் உள்நாட்டு போர் உச்சகட்டத்தை அடைந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இராக் நாட்டின் மொசூல் நகரில் கட்டிட வேலை பார்த்துவந்த 40 இந்தியர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்.
இரண்டு நாள் வரை கடத்தப்பட்ட 40 பேர்களும் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாத நிலையில், நேற்று இரவு அவர்கள் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தப்பட்ட 40 இந்தியவர்களும் மொசூல் புறநகரில் உள்ள பஞ்சாலை மற்றும் அரசு கட்டிடங்களில் பத்திரமாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்தன.
40 இந்திய தொழிலாளர்களையும் மீட்க இந்திய வெளியுறவுத்துறை ஈராக் வெளியுறவுத்துறையிடம் பேச்சு நடத்தி வருகிறது. இந்நிலையில் கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் ஒருவர் இன்று காலை தப்பிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தப்பிய அந்த இந்தியர் தற்போது ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான கிர்பில் நகரில் ஒரு முகாமில் இருப்பதாகவும், அவரை நேரில் பார்க்க ஈராக் வெளியுறவுத்துறை அதிகாரி விரைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தப்பிய இந்தியரை சந்தித்தால் மீதி இருக்கும் 39 இந்தியர்களின் நிலை என்ன என்ற விபரம் தெரிய வரும்.