பேருந்து, ரயில் என அனைத்து போக்குவரத்துக்கும் ஒரே பாஸ். மம்தா அதிரடி
தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பேருந்து, ரயில் என ஒவ்வொரு போக்குவரத்துக்கும் தனித்தனி பாஸ் வாங்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் கொல்கத்தாவில் இனிமேல் அனைத்து போக்குவரத்துக்கும் ஒரே பாஸ் இருந்தால் போதுமானது என மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை லண்டன் உள்பட ஒருசில சர்வதேச நகரங்களில் இருக்கின்றது. தற்போது இந்த முறை இந்தியாவிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வெஸ்ட் பெங்கால் ட்ரான்ஸ்போர்ட் கார்டு’ என்ற கூறப்படும் புதிய பாஸ் ஒன்றை மம்தா பானர்ஜியின் மேற்குவங்க அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த பாஸ் மாநில அரசின் கீழ் இயங்கும் அனைத்து பேருந்து, டிராம் மற்றும் படகுசவாரி போன்ற போக்குவரத்துகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பாஸ் மெட்ரோ ரயில் சேவைக்கு பொருந்தாது.
ஒரே பாசில் அனைத்து போக்குவரத்துகளிலும் பயன்படுத்தப்படும் இந்த கார்டுகள் இப்போதைக்கு கொல்கத்தாவின் ஐந்து பேருந்து நிலையங்களில் வழங்கப்படுவதாகவும், இதைத்தொடர்ந்து மேலும், 20 பேருந்து நிலையங்களில் கூடிய விரைவில் இந்த கார்டு வழங்கப்படும் என்றும் மேற்குவங்க அரசு அரசு தெரிவித்துள்ளது.