திருப்பதி கோவிலுக்கு இனி நினைத்த போதெல்லாம் போக முடியாது! புதிய சட்டம் அமல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆந்திராவில் இருந்து மட்டுமின்றி தமிழகம் உள்பட தென்னிந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருப்பதால் தேவஸ்தான போர்டுக்கும், இந்து அறநிலையத்துறைக்கும் கூடுதல் பணி ஏற்படுகிறது.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஒருவர் வருடத்திற்கு 2 முறை மட்டுமே தரிசனம் செய்யும் முறையை கொண்டுவர முடிவு செய்திருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படவிருப்பதாகவும் ஆந்திர இந்து அறநிலையத்துறை அமைச்சர் மாணிக்கயால ராவ் கூறியுள்ளார்.
திருப்பது கோவிலுக்கு மாதம் ஒருமுறை சென்று வணங்குபவர்களின் எண்ணிக்கை மட்டுமே பல ஆயிரங்கள் இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு அவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளடு.