ராகுல்காந்தியின் ‘கட்டில் திட்டம்’ தொடர்ந்து செயல்படுமா?
உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ராகுல்காந்தி வித்தியாசமாக கட்டில் சபை என்ற புதுவியூகத்தை தொடங்கி வைத்தார்.
அதாவது ராகுல்காந்தி கூட்டத்தில் ஆயிரக்கணக்கான கட்டில்கள் வைக்கப்படும் என்றும் இந்த கட்டில்களில் அமர்ந்து பொதுமக்கள் அவருடைய பேச்சை கேட்க வேண்டும் என்பதே இந்த கட்டில் திட்டத்தின் நோக்கம்
இதன்படி சமீபத்தில் ராகுல்காந்தியின் கூட்டம் நடைபெற்ற சம்பல் பகுதிக்கு சுமார் 6000 கட்டில்களை காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்தனர். கூட்டம் முடிந்த பின்னர் கட்டில்களை அடுத்த கூட்டத்திற்கு எடுத்து செல்ல திட்டமிட்டிருந்தது.
ஆனால் கூட்டம் முடிந்த பின்னர் கூட்டத்திற்கு வந்தவர்கள் ஆளுக்கொரு கட்டிலை வீட்டிற்கு எடுத்து கொண்டு சென்றுவிட்டதால் கொண்டு வந்திருந்த 6000 கட்டில்களில் சுமார் 5000 கட்டில்களை காணவில்லை. எனவே அடுத்த ராகுல்காந்தி கூட்டத்தில் இந்த கட்டில் திட்டம் தொடங்குமா? என்று தெரியவில்லை என உபி காங்கிரஸார் கூறியுள்ளனர்.