ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலில் மேலும் 40 நகரங்கள். வெங்கையா நாயுடு

ஸ்மார்ட் நகரங்களின் பட்டியலில் மேலும் 40 நகரங்கள். வெங்கையா நாயுடு

smartcity_2453403gபாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டங்களில் ஒன்றான ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ஏற்கனவே சென்னை, கோவை உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்கள் இருக்கும் நிலையில் தற்போது மேலும் 40 நகரங்கள் இதில் இணைக்கப்படவுள்ளதாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.

சென்னை ஐஐடி, இந்திய தேசிய பொறியியல் அகாதெமி (ஐஎன்ஏஇ) ஆகியன இணைந்து நடத்தும் மூன்று நாள் “பொறியாளர்கள் மாநாடு 2016′ சென்னை ஐஐடி வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:-

ஆக்கிரமிப்புகள், அனுமதி இல்லாத கட்டடங்கள் பெருகுவதால் நகரங்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், பெரிய அகலமான சாலைகள், தடையற்ற மின்சாரம், திட்டமிட்டு கட்டப்பட்ட வீடுகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய 100 “ஸ்மார்ட்’ நகரங்கள் உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

இதன்படி, முதல் கட்டமாக 20 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. மேலும் 40 நகரங்களைத் தேர்வு செய்ய தணிக்கைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. இந்த மாத இறுதியில் பட்டியல் வெளியிடப்படும்.

இந்தத் திட்டத்துக்காக முதல் கட்டமாக 33 “ஸ்மார்ட்’ நகரங்களுக்கான ரூ. 78 ஆயிரம் கோடியை ஒதுக்கி மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டது. விரைவில் தேர்வு செய்யப்பட்ட நகரங்களுக்கு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படும்.

அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, முழுவதும் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள், நிபந்தனைகளின் அடிப்படையிலேயே “ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பயன்பெறும் நகரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. எனவே, நகரங்கள் சிறப்பான திட்டப் பரிந்துரைகளுடன் வந்தால், தேர்வாவது உறுதி.

Leave a Reply