மத்திய பிரதேச மாநிலத்தில் பொதுமக்களுக்கு வெங்காயம் இலவசம். அரசு அதிரடி
தமிழகம் ஆரம்பித்து வைத்த இலவசம்’ என்னும் முறையை தற்போது பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கிவிட்டது. அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம் வெங்காயத்தை இலவசமாக வழங்கவுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது பயங்கரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக வெங்காயம் அழுகிப் போவதைத் தடுக்கும் வகையில், பொது மக்களுக்கு இலவசமாக வெங்காயம் வழங்க அம்மாநில அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது.
வெள்ளத்தினால் ரூ.100 கோடி மதிப்பிலான வெங்காயம் விளை நிலங்களிலேயே அழுகிப் போனதாலும், கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 3.25 லட்சம் குவிண்டால் வெங்காயம் கெட்டுப் போனதையும் அடுத்து இந்த முடிவை மாநில அரசு எடுத்துள்ளது.
வெங்காய உற்பத்தியில் முன்னிலையில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தில், மழைக் காலங்களில் அதனை சேமித்து வைக்க போதிய வசதி இல்லாததால், கிடங்குகளிலேயே வெங்காயம் அழுகும் நிலை ஏற்பட்டது.
இதனைத் தடுக்க, தற்போது கிடங்குகளில் இருக்கும் வெங்காயத்தை, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. குறைந்தது ஒரு கிலோ வெங்காயத்தை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து, போக்குவரத்து செலவையாவது மீட்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.