ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்த ஸ்னாப்டீல் நிறுவனத்தின் மீது வழக்கு.

snapdeal
ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்யும் மிகப்பெரிய நிறுவனமான ஸ்னாப்டீல் நிறுவனம் மீது மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிரடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. டாக்டர்களின் வழிகாட்டுதலில்படி விற்பனை செய்ய வேண்டிய மருந்துகளை இந்த நிறுவனன் ஆன்லைன் மீது விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஃபிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் மிகப்பெரிய அளவில் வர்த்தம் செய்து வரும் நிலையில் ஸ்னாப்டீல் நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தில் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஏப்ரல் மாதம் 16ஆம்தேதி திடீரென  சோதனை செய்தனர். இந்த சோதனையில் விதிமுறைகளை மீறி தள்ளுபடி விலையில் ஆன்லைன் மூலம் மருந்து மாத்திரைகளை விற்பனை செய்து வருவது வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்னாப்டீல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குனால் பல் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்ற 5 நிறுவனங்களின் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது.

மருத்துவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் மருந்துகளை உட்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்படுவதுடன் சில சமயத்தில் உயிர் இழப்பை கூட ஏற்படுத்தும். அப்படி ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது கேள்வியும் எழுப்பபட்டுள்ளது.

Leave a Reply