டிசம்பர் 28-இல் “நெட்’ தேர்வு: இணையம் மூலம் கட்டண வசதி
பல்கலைக்கழக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வாக வரையறுக்கப்பட்டுள்ள “தேசிய தகுதித் தேர்வுவுக்கு (நெட்)’ விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக் கட்டணத்தை இணையம் மூலம் செலுத்தும் வகையில் புதிய நடைமுறையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) கொண்டு வந்துள்ளது.
இந்த நடைமுறை மூலம், வங்கிக்குச் செல்லாமல் கடன் அட்டை (கிரிடிட் கார்டு), பண அட்டையைக் (டெபிட் கார்டு) கொண்டே கட்டணத்தைச் செலுத்திவிடலாம்.
“நெட்’ தகுதித் தேர்வை சி.பி.எஸ்.இ. முதன் முறையாக இப்போது நடத்துகிறது. மொத்தம் 79 பாடங்களின் கீழ் நடத்தப்படும் இந்தத் தேர்வு நாடு முழுவதும் 89 ஒருங்கிணைப்பு நிறுவனங்கள் மூலம் டிசம்பர் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கு முன்னர், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மூலம் “நெட்’ தேர்வு நடத்தப்படும்போது, தேர்வுக் கட்டணத்தை வங்கியில் மட்டுமே செலுத்த முடியும். மேலும், வங்கி சலான், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இரண்டு வேலை நாள்கள் காத்திருக்க வேண்டும்.
ஆனால், இப்போது ஆன்-லைனிலேயே தேர்வுக் கட்டணத்தை செலுத்தும் வகையில் சி.பி.எஸ்.இ. எளிமைப்படுத்தியுள்ளது. மேலும், வங்கி சலான், விண்ணப்பங்களையும் உடனடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பான மேலும் விவரத்தை ஸ்ரீக்ஷள்ங்ய்ங்ற்.ய்ண்ஸ்ரீ.ண்ய் இணையதளத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
முக்கியத் தேதிகள்
இணையம் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசித் தேதி நவம்பர் 15
கட்டணத்துக்கான வங்கிச் சலானை பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் நவம்பர் 15
சலான் மூலம் வங்கியில் கட்டணம் செலுத்த இறுதி நாள் நவம்பர் 18
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் கடைசி நாள் நவம்பர் 19
விண்ணப்பத்தை ஒருங்கிணைப்பு மையத்தில் சமர்ப்பிக்க இறுதித் தேதி நவம்பர் 25