ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுனர் தூக்கில் தொங்கி தற்கொலை

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுனர் தூக்கில் தொங்கி தற்கொலை

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பலர் உயிரிழந்து வரும் நிலையில் இன்று சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் 50 ஆயிரம் பணத்தை ஆன்லைனில் இழந்ததால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி என்ற பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்ற ஆட்டோ டிரைவர் தனது மனைவி பெயரில் மகளிர் சுய உதவி குழுவில் கடன் பெற்று, அந்த பணத்தை ஆன்லைன் ரம்மியில் விளையாடினார். பணம் முழுவதும் இழந்ததை அடுத்து மனமுடைந்து அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து உடனடியாக ஆன்லைன் தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.