ஆன்லைன் விற்பனையில் 40% போலி பொருட்கள். ஒரே ஆண்டில் 77 ஆயிரம் புகார்கள்

ஆன்லைன் விற்பனையில் 40% போலி பொருட்கள். ஒரே ஆண்டில் 77 ஆயிரம் புகார்கள்
online
இந்தியாவில் தற்போதுதான் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் பொதுமக்களிடம் அதிகரித்து வருகின்றது. ஆனால் சீனாவில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ஆன்லைனில் பொருட்களை வாங்கி வந்த சீனர்கள், தற்போது திரும்பவும் நேரடியாக கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் ஆன்லைனில் வாங்கும் பொருட்கள் 40% போலியாக இருப்பதாகவும், இதுகுறித்து கடந்த ஒரே ஆண்டில் 77,800 புகார்கள் காவல்துறையினரிடம் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆன்லைன் விற்பனையில் உலகிலேயே நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் சீனா, புகார்கள் காரணமாக வருங்காலத்தில் தனது இடத்தை இழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உலகிலேயே நம்பர் ஒன் ஆன்லைன் வர்த்தக்கத்தில் ஈடுபட்டு வரும்  அலிபாபா உட்பட பல முக்கிய ஆன்லைன் நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன

“ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் 58.7 சதவீதம் பொருட்கள் மட்டும்தான் தரமானவை என்றும், மற்றவை அனைத்தும் போலிகள் அல்லது தரம் குறைந்தவை என்றும் சமீபத்தில் சீனாவில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்று கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Online shopping garners maximum complaints in China

Leave a Reply